No results found

    செங்கோட்டையில் வாஞ்சிநாதன் நினைவு நாள் அனுசரிப்பு


    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் 112-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், செங்கோட்டையில் உள்ள வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சயில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வருவாய் தாசில்தார் முருகுசெல்வி, செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, வடகரை சேர்மன் சேக்தாவூது, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகேசன், நூலகர் ராமசாமி, வாஞ்சிநாதனின் உறவினர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வக்கீர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதபோல் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال